Search This Blog

Wednesday 3 April 2013

எனது உயிர் நண்பனே


அ - ன்னையின் அரவணைப்பை
ஆ - னந்தமாய் நட்பில் உணர்த்தி - நண்பன் என்
இ - தயத்திலே இனிய துடிப்பானான்
ஈ - ர மனசால் நட்புக் கருணை எனது
உ - ள்ளமதில் உணரச் செய்தே
ஊ - ட்டுகிறான் தோளிலே கைபோட்டு
எ - ன் நெஞ்சிக்குள் நம்பிக்கை - அவனிருக்க
ஏ - ன் தோல்வி எனக் கேட்பேன் - நான்
ஐ - யமின்றி சொல்வேன் அவனே தெய்வம் என
ஒ - ரு தாயின் தாலாட்டு அவன் பேச்சு
ஓ - ங்கார நாதம் அவன் வாடா என்றழைப்பது
அ - வனோடு இருக்கையிலே சிறுகுழந்தை
ஆ - கிறேன் நான்....!
இ - ந்தப் பிறவி கொடுத்தற்கு
ஈ - சனிடம் நன்றி சொல்கையிலே
உ - ண்மையாய் என் அடுத்த பிறவியில் என்
ஊ - னோடு ஒட்டியே என நண்பன் பிறக்க
எ - ழிலான ஒரு வரம் கேட்பேன்
ஏ - ன் என்றால் சாவும் எங்களைப் பிரிக்காது !
ஐ - யோ என் நண்பனே வா
ஒ - டிந்து போன என் கைகளுக்கு
ஓ - டி வந்து மாற்றாக நீ இரு - என
அ- ன்று வந்த அந்தக் கனவோடு
ஆ-னந்தமாய் விழித்தெழ நான் கண்டேன்
இ - ரும்பு மேசை மீது
ஈ - என்று சிரித்தபடி எனது நண்பன் புகைப்படம்
உ - திரிப் பூக்கள் போடப்பட்டு
ஊ - துபத்தி கொளுத்தப் பட்டு
எ - தற்கு நடந்தது அந்த விபத்து
ஏ - ன் இறந்தான் எனை விட்டு ?
ஐ- யஹோ ஐயஹோ நண்பனே நண்பனே !
ஒ-
ஓ - என அழுகிறேன் துடைப்பதற்கு நீ இல்லை!

Yaro Ivan

Sidharth venugopal